காலையில் சூடு தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிங்க... அதிசயத்தை காண்பீர்கள்
காலை வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூடான நீரில் எலுமிச்சை
சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் கல்லீரலுக்கு மிகவும் நன்மை கிடைக்குமாம்.
ஒரு டம்ளர் சூடான நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், பசியை குறைப்பதுடன், தொப்பையில் உள்ள கொழுப்பையும் கரைக்கும்.
தினமும் காலை சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்துவந்தால் செரிமான பிரச்சனைகள் குறையுமாம்.
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் சூடான நீரில் இதை கலந்து குடித்து வந்தால் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறையுமாம்.
எலுமிச்சையின் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் அதிகம் காணப்படுவதால், காலை சூடான நீரில் கலந்து குடிக்கும் போது மலச்சிக்கல் குறைந்து விடுகின்றது.
சூடான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும் போது வாயு பிரச்சனைகள் விரைவில் குறையுமாம்.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடலில் கொழுப்பை கரைக்க உதவுவதுடன் மற்றும் அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |