குரங்குக்கு weight loss சிகிச்சை
இன்று மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது உடற்பருமன் தான்.
அளவுக்கு அதிகமான உணவு உடல் அழகையும் ஆரோக்கியத்தையும் சேர்த்து கெடுத்துவிடும்.
இது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொருந்தும்.
தாய்லாந்து தலைநகர் பெங்கொங் பகுதியில் அதிகளவான குரங்குகள் உள்ளன.
இதில் காட்ஸில்லா மற்றும் ஃபேட்டி என்ற இரு குரங்குகள் அளவுக்கதிகமான உடல் எடையைக் கொண்டிருந்தன.
பொதுவாகவே குரங்குகளின் எடை 8 தொடக்கம் 10 கிலோவில் இருக்க வேண்டும். ஆனால், காட்ஸில்லா குரங்கின் எடை 27 கிலோவாக காணப்படுகிறது.
இதற்குக் காரணம், பல்வேறு வகையான துரித உணவுகளை உட்கொண்டமையே. துரித உணவுகள் அதிகமாக உட்கொண்டமையால் தொப்பை அதிகமாகி தரையில் இழுத்தபடி இந்த குரங்கு செல்கின்றது.
இதையடுத்து, குறிப்பிட்ட இந்த குரங்குக்கு சிகிச்சையளித்து எடையைக் குறைக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.