சடலமாக கிடந்த நபர்! கண்ணீருடன் முத்தமிட்டு குரங்கு செய்த காரியம்
உயிரிழந்த நபர் ஒருவருக்கு குரங்கொன்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் நெகிழ்ச்சி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உயிரிழப்பு
தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன் என்ற நபரொருவர் தினமும் காட்டுப் பகுதியிலிருந்து வரும் குரங்கொன்றுக்கு உணவளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பீதாம்பரம் ராஜன் சுகயீனம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இவரின் உடல் இறுதி சடங்கிற்காக வைக்கப்பட்டிருந்த போது அந்த குரங்கு வந்து இவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை பரிசோதித்துள்ளது.
பின்னர் அவர் மரணித்திருப்பதை அறிந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவரை முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.