தலைமையாசிரியர் நாற்காலியில் அமர்ந்து குரங்கு அடித்த கும்மாளம்: வைரலாகும் காட்சி
மத்தியப் பிரதேசத்தின் (Madhya Pradesh) குவாலியரில் குரங்கு ஒன்று அரசுப் பள்ளிக்குள் நுழைந்து பள்ளி தலைமை ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்து விளையாடுவதைக் காண முடிகிறது.
குவாலியரில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்குள் ஒரு குரங்கு பட்டாளம் நுழைந்ததை அடுத்து இந்த சம்பவம் ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் இருந்த ஒரு குரங்குக்கு, தலைமை ஆசிரியரின் நாற்காலியில் அமர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதால், நாற்காலியில் ஏறி பின்ப இறங்க மறுத்துள்ளது.
பள்ளியைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் குரங்கை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.
ஆனால் அதற்கு எந்த பலனுமில்லை. தன்னைச் சுற்றியுள்ள பரபரப்புக்கு செவிசாய்க்காமல், குரங்கு பின்னர் நாற்காலியில் சுற்றப்பட்ட பிளாஸ்டிக்கை கிழித்தெறிய சென்றுள்ளது.
ஆனால் சிறிது நேரத்தில் பள்ளியின் ஊழியர்கள் குரங்கினை வெளியேற்ற முயற்சித்த போது குரங்கு வெளியேறியுள்ளது.