Viral Video! மும்முரமாக திருடும் குரங்கு தோல் கொடுக்கும் நாய்: இரண்டு பேரும் செய்ற வேலைய நீங்களே பாருங்க!
பசி வந்தால் பத்தும் பறக்கும் அது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது தான். அப்படி பசிக்காக கடைக்கு போய் திருடும் காட்சி இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
திருட்டுக் கூட்டணி
இணையத்தில் எத்தனையோ வீடியோக்கள் பதிவேற்றப்பட்டாலும் ஒரு சில வீடியோக்கள் உங்களை சிரிக்க வைக்கும், ஒரு சில வீடியோக்கள் உங்களை அழவைக்கும் மேலும் சில வீடியோக்கள் புத்துணர்ச்சியையும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கும்.
அதிலும் பல சுவாரஸ்யமான வீடியோக்களும் அவ்வப்போது உலாவிக் கொண்டிருக்கின்றது. அதில் எமது கண்ணில் பட்ட வீடியோ ஒன்று தான் இந்த வீடியோ,
அந்த வீடியோவில் நாய் ஒன்றின் மீது குரங்கு ஏறிக் கொண்டு சிப்ஸ்களை திருட ஸ்கெட்ச் போட்டு திருட ஆரம்பித்திருக்கிறார்கள்.
கடையில் தொங்க விடப்பட்டிருந்த சிப்ஸ் பெக்கட்டுகளை வாயால் கடித்து கடித்து இழுக்கிறது குரங்கு ஆனால் அதனால் முடியாமல் கீழே குதித்து விட்டு மீண்டும் நாயின் மேலே ஏறி சிப்ஸ் பெக்கட்டுகளை எடுக்க பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்தக் காட்சியை தரனா ஹுஸைன் என்பவர் பகிர்ந்து நாயின் உதவியுடன் சிப்ஸ் பாக்கெட்டை குரங்கு எடுக்க முயல்வது இன்று நீங்கள் பார்க்கும் மிக அழகான விஷயம் என தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறார்.
The ? trying to pick up a packet of chips with the help of ? is the cutest thing you will watch today ❣️❣️. #goodmorning #dog #dogs #monkey #monkeys #animal #AnimalLovers #cute #lovable #adorable #friendship #bond #team pic.twitter.com/bkMAEU13NC
— Tarana Hussain (@hussain_tarana) May 8, 2022