தூங்கிய தாயை பாதுகாக்க போராடும் குட்டி குரங்கு: 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத காட்சி
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன. சமீபத்திய நாட்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது இரு வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இது குரங்குகளின் லூட்டி பற்றிய ஒரு வீடியோக்களாகும்.
இந்த வீடியோக்களில் இரு குரங்குகள் செய்வதைப் பார்த்தால் சிரிப்பை அடக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வேடிக்கையான வீடியோக்களை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இதை லைக் செய்துள்ளனர்.
தற்போது வைரல் ஆகி வரும் மற்றொரு வீடியோவும் குரங்குகள் பற்றியது. இதில், ஒரு குரங்கு தனது குட்டிக் குழந்தையின் அருகில் வசதியாக படுத்திருக்க, அப்போது அங்கு வரும் மற்றொரு குரங்கு அதை சீண்டுகிறது. ஆனால், அந்த குரங்கின் குழந்தை தன் தாயின் தூக்கம் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள சீண்டும் குரங்கை எதிர்த்து நிற்கிறது. இந்த கியூட்டான வீடியோ பார்க்க அற்புதமாக இருக்கிறது.