இந்த மந்திரத்தை சொன்னால் போதும் நீங்க சொந்த வீடே வாங்கிடலாம்!
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் கையில் தங்காது. சிறிதளவு பணம் சேருவதற்கு கூட பெரும்பாடாக தான் இருக்கும்.
ஒருவருடைய பொருளாதார நிலைமையை வைத்துதான் இந்த சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது.
பலரும் தங்களது பணத்தை ஏதேனும் ஒரு முதலீட்டில் செலுத்தி அதனை பல மடங்காக உயர்த்த வேண்டும் என்று அரும்பாடு தான் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஜாதக அமைப்பு
- ஒருவருடைய ஜாதகத்தில் 2ஆம் வீடு, 5ஆம் வீடு, 8ஆம் வீடு, 9ஆம் வீடு, 11ஆம் வீடு, 1ஆம் வீடு இவற்றில் சுக்கிரனின் ஆதிக்கம் இருந்தால் பணவரவு தானாகவே உங்களை வந்தடையும்.
- இவற்றைப் பொறுத்து கிரகங்களின் ஆதிக்கமும் உங்களுக்கு சாதகமாக இருந்தால் நீங்கள் செய்யும் சிறு முயற்சிக்கும் வெற்றி கிடைத்து பணம் உங்களை வந்தடையும்.
- வியாழன் செல்வத்திற்கு உரிய கிரகமாகும். வியாழன் கிரகத்தின் அனுகிரகம் உங்களுக்கு இருந்தால் உங்களிடம் செல்வம் பெருகிக் கொண்டே செல்லும்.
- சுக்கிரன் ஆடம்பரம் மற்றும் வசதிக்கான கிரகமாகும். சுக்கிரனின் அருள் உங்களுக்கு இருந்தால் உங்களிடம் அளவுக்கு மிஞ்சிய செல்வங்கள் இருக்கும்.
- புதன் நிதிக்கு அதிபதியாவார். புதன் கிரகத்தின் அருள் உள்ளவர்கள் அவர்களின் தொழிலில் சிறந்து விளங்குவார்கள். நீங்கள் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அதில் உங்களுக்கு பன்மடங்கு லாபம் கிடைக்கும்.
சனி பெயர்ச்சி 2022 : ஏழரை சனியால் ஏழரை வருடம் சிக்கி சின்னாபின்னமாகும் ராசிகள்.... யாருக்கு ஆபத்து!
பணத்தை ஈர்ப்பதற்கான வழிபாடுகள்
சில மந்திரத்தை சொல்வதன் மூலமும் உங்கள் பணப்பிரச்சினை தீர்ந்து செல்வ செழிப்பு உண்டாகும்.
“ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம
ஓம் நமோ பகவதே ஸ்ரீ வாஸுதேவாய நம
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலேயாய பிரசீத பிரசாத் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியே நம”
இந்த மந்திரத்தை தினமும் காலை பூஜை செய்து முழு மனதுடன் சொல்லி வந்தால் செல்வ, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.
உங்களுடைய நிதி நிலைமை மேம்பட்டு வெகு சீக்கிரத்தில் சொந்த வீடு வாங்கும் அளவிற்கு உங்கள் கையில் பணம் சேர்ந்து விடும்