வாழ்நாள் முழுவதும் பண கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டுமா? இதோ அருமையான டிப்ஸ்
சேமிப்பு என்பது மிகவும் நல்லதொரு விடயமாகும். அனைவரும் நிச்சயம் கடைபிடிக்க வேண்டியதொரு பழக்கமாகும்.
யார் பணத்தை சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றாரோ அவர் எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை.
பணத்தை சேமிப்பதற்கான டாப் 10 டிப்ஸ் இதோ...
கடன் வாங்க வேண்டாம்...
உங்கள் வரவுக்கு ஏற்றவாறு செலவுகளை செய்யுங்கள். அது உங்களை கடன் வாங்கும் தீய பழக்கத்திலிருந்து காப்பாற்றும்.
ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்...
பணத் தட்டுப்பாடு இருக்கும் சமயங்களில் வீண் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும்.
செலவுகளை கண்காணிக்கவும்
பணத்தை தேவையில்லாமல் செலவு செய்வதை தவிருங்கள்.
காப்பீட்டுத் திட்டங்கள்
அதிகமான காப்பீட்டுத் திட்டங்களை தவிருங்கள். வயது, குடும்ப நிலை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிகமான காப்பீட்டுத் திட்டங்கள் பணத்தை விரயமாக்கும்.
மின்சார பயன்பாட்டை குறைக்கவும்
மின் விசிறிகள், மின் விளக்குகள் என்பவை தேவையற்ற நேரங்களில் எரிந்தால் அவற்றை அணைக்கவும்.
சேவைகளுக்கான செலவுகளை குறைத்தல்
சினிமா, கேபிள் டிவி என பயன்படுத்தும் சேவைகளுக்கான செலவை குறையுங்கள்.
ஒன்லைன் முறை
நேரம் மற்றும் போக்குவரத்து செலவுகளை குறைத்துக்கொள்ள முடிந்தவரை பணிகளை ஒன்லைனில் முடித்துக் கொள்ளவும்.
கேளிக்கை செலவுகள்
திருமணங்கள், சுற்றுலா, நகை மற்றும் உடை வாங்குதல் இதுபோன்ற செலவுகளுக்கு பணத்தை சேமித்து வைப்பது சிறந்தது.
சேமிப்பு
அவசியம் மாத வருமானத்தில் ஒரு தொகையை சேமிக்க வேண்டும். வங்கி சேமிப்பு கணக்குகள், தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் போன்ற ரிஸ்க் இல்லாத திட்டங்களில் சேமிக்கலாம்.
வெளியில் உண்ணுதல்
வெளியில் சென்று சாப்பிடுதல் அதிகப்படியான செலவுகளை ஏற்படுத்தும். எனவே அதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.