வைக்கோல் போரில் மறைத்து வைக்கப்பட்ட பணம்.. சோதனையில் அதிர்ந்து போன அதிகாரிகள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுபவர் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகர். இதையடுத்து, இவரிடம் ஜேசிபி ஓட்டுனராக வேலை பார்க்கும் வலசுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவரது வீட்டிற்கு இரவு வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போ, அழகர்சாமியின் வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த வைக்கோல் போரில் ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்துள்ளது,. பணத்தை கைப்பற்றியதில், சுமார் 1 கோடி ரூபாய் சிக்கியுள்ளது. மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டர்.,
இவை, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானதால் சோதனை நடந்துள்ளது.
மணப்பாறை பகுதியில் எம்.எல்.ஏ பணியாளர் வீட்டிலிருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.