திருமணத்துக்கு முன்பே அது நடந்தது! பலருடன் தவறான பழக்கம்.. பிரபல நடிகை குறித்து முன்னாள் கணவர் பகீர்
நடிகை லட்சுமியுடனான திருமண உறவு முறிந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் முன்னாள் கணவரான மோகன் ஷர்மா.
1970களில் முன்னணி நடிகையாக இருந்தவர் லட்சுமி, மலையாளத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த மோகன் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ஒரு சில வருடங்களில் இவர்களது திருமணம் முடிவுக்கு வந்தது, இதுகுறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார் மோகன் ஷர்மா.
அவர் பேசுகையில், லட்சுமியின் உண்மையான அம்மா ருக்மணி தான், ஆனால் என்னிடம் தத்தெடுத்து வளர்த்தாங்க என்று கூறினார்.
மும்பையில் நான் வசித்தேன், படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் மட்டுமே இங்கு வருவேன்.
ஒருமுறை விளம்பரத்தில் நடிப்பதற்காக வந்த லட்சுமி, எனக்கு போன் செய்து உதவ முடியுமா என கேட்டார்.
நானும் அவரும் ஷாப்பிங் சென்றோம், அங்கே விலை உயர்ந்த ஷேவிங் சொல்யூஷனை பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் வாங்கவில்லை, ஆனால் ஹொட்டலுக்கு வந்து இறங்கிய போது லட்சுமி அதை என் கையில் கொடுத்து, நான் உங்களது வாழ்வில் நாய் போலவே இருப்பேன் என்று கூறினார்.
அன்றிரவு எனக்கு தூக்கம் இல்லை, மறுநாள் காலையில் அவருக்கு போன் செய்தேன், அவரை சந்திக்க சென்றேன்.
எனக்காக காத்திருந்தார், அப்போது திருமணம் செய்து கொள்ள ஆசை என்று கூறினார், அங்கிருந்து ஹொட்டல் அறைக்கு சென்றோம்.
அங்கே என்ன நடக்கப்போகிறது என்பதை என்னால் கணிக்க முடிந்தது, முதலில் நான் குங்குமம் வைத்த பின்னர் அனைத்தும் நடந்தது, அதன்பின் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
அதன்பின்னர் நாங்கள் செலவழித்த நேரம் குறைவு, இருவரும் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தோம்.
ஐஸ்வர்யாவுக்கு ஒரு வயது இருக்கும், அப்போது தான் பேசத் தொடங்கினார், கணவன்- மனைவியாக நாங்கள் இருந்த நேரம் குறைவு.
அந்த இடைப்பட்ட நேரத்தில் அவர் நிறைய தவறுகள் செய்து விட்டார், வேறு ஆண்களுடன் தொடர்பு இருந்தது.
நான் எந்த ஒரு தவறும் செய்தது இல்லை, அப்படி இருக்கும் போது லட்சுமியை இப்படி இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒருமுறை நான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஐஸ்வர்யா என்னிடம் அம்மா யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறார் என கூறினார்.
அப்படியே அந்த வீட்டில் இருந்து நான் வெளியேறிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஐஸ்வர்யாவை வளர்ப்பதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அவள் தன்னுடைய சொந்த மகள் இல்லை என்பதால் வழக்கில் ஜெயிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |