உங்கள் ஆதரவு தேவை.. கமல் போட்ட ட்வீட்டுக்கு பதிலளித்த மு. க ஸ்டாலின்!
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
இதனிடையே, திமுக வெற்றி பெற்ற நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, கமலின் பதிவிற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும். என தெரிவித்துள்ளார்.
அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான @ikamalhaasan அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
— M.K.Stalin (@mkstalin) May 2, 2021
பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும். https://t.co/Wl7rC9Oxjn