கோதுமையில் 3 இரகசிய பொருட்களை கலந்தால் நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம்...என்ன பொருள்?
இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு நோய் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. நீரிழிவு நோய் ஒரு பெரும் தலைவலியாக இருக்கும் அதே சமயம் இன்னும் புதிது புதிதாக நீரிழிவு இரண்டு மூன்று தற்போது ஐந்து வரை வந்து விட்டது.
இதுாபன்ற நோய்கள் தொற்றால் ஏற்படும் நோய் அல்ல. இவை நம் உணவு பழக்கவழக்கத்தால் வருகின்ற நோயாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நமது அன்றாட உணவில் சிறிதளவு மாற்றங்களைச் செய்தால், இந்த நோயை பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.
நாம் வீட்டில் அதிகளவு உணவு செய்ய பயன்படுத்துவது கோதுமை மா தான். கோதுமை மாவில் குறிப்பிட்ட 3 பொருட்களை கலந்தால் அது நமது இரத்த சக்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும். இது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கோதுமை மாவில் கலக்க வேண்டிய பொருட்கள்
வெந்தய விதை பொடி வெந்தய விதைகள் அல்லது வெந்தயம் ஒரு ஆயுர்வேத மருந்தாக அக்காலம் தொடக்கம் இக்காலம் வரை பயன்பாட்டில் இருக்கிறது.
இதில் காணப்படும் நார்ச்சத்து மற்றும் கேலக்டோமன்னன் இரத்தத்தில் சர்க்கரையை உறிஞ்சும் செயல்முறையை மெதுவாக்குகிறது. எனவே 1 கிலோ கோதுமை மாவில் சுமார் 50 கிராம் வறுத்த வெந்தயப் பொடியைக் கலக்கி உணவாக்கலாம்.
ஆளிவிதை மாவு சமீப காலமாக மிகவும் பிரபலமாகி வருகின்றன. இதற்குக் காரணம் அதன் அற்புதமான நன்மைகள் தான்.
இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அவற்றில் ஏராளமாகக் காணப்படுகின்றன. எனவே உணவு செய்ய 1 கிலோ மாவில் 2-3 டீஸ்பூன் ஆளி விதை மாவை கலக்க வேண்டும்.
பார்லி மாவு நீரிழிவு நோயாளிகளுக்கு பார்லி மாவு ஒரு சிறந்த தேர்வாகும். இதில் பீட்டா-குளுக்கன் ஃபைபர் உள்ளது.
இது கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக உடைக்கிறது. கொதுமை தாவில் உணவு சாப்பிட ஆசைப்படுபவர்கள் 1 கிலோ கோதுமை மாவில் 250 கிராம் பார்லி மாவை கலந்து உணவாக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |