'பிழைக்க மாட்டான்’ என்ற மருத்துவர்கள் - நாய் போல குரைத்த சிறுவன் 22 நாட்களில் மீண்ட அதிசயம்!
உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் கரண், நாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 16 அன்று அவர் நாயைப் போல குரைக்கும் காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. வாயில் இருந்து தொடர்ந்து உமிழ்நீர் வழிந்தது.
நடந்தது என்ன?
கடந்த ஆண்டு டிசம்பர் 20 அன்று, வாராணசியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது கரணை ஒரு நாய் கையில் கடித்தது. உடனே மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு டெட்டனஸ் ஊசி மட்டும் போடப்பட்டது.
ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று கரணுக்குத் தெரிந்திருந்தாலும், மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கிருந்த ஊழியர் ஒருவர், டெட்டனஸ் ஊசி போட்டுவிட்டதால் ரேபிஸ் ஊசி தேவையில்லை என்று கூறியதாக கரண் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு சுமார் நான்கு மாதங்கள் கரணுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், மார்ச் 13 அன்று வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய கரண் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதே போல் மறுநாள் மீண்டும் மயங்கி விழுந்ததுடன், நாயைப் போல குரைக்கத் தொடங்கியுள்ளார். அவரால் பேசவும் முடியவில்லை. என்பதால், குடும்பத்தினர் பயந்து போய் இது ஏதோ இயற்றைக்கு அப்பாற்பட்ட விடயம் என பிராத்தனையிலும் ஈடுப்பட்டுள்ளனர்.
பின்னர் நிலைமை மோசமடையவே பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றும் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை. இறுதியில் வாராணசியில் உள்ள BHU மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள், கரண் ரேபிஸின் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், இனி குணமடைவது கடினம் என்றும் கூறினர். மருத்துவர்களின் வார்த்தைகளைக் கேட்டு கரணின் தந்தை நம்பிக்கையிழந்தார். இருந்தாலும் மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்கள்.
22 நாட்களில் மீண்டது எப்படி?
அப்போது ஹர்ஹுவாவில் இருந்த ஒரு உறவினரின் உதவியுடன் கரணுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த சில வாரங்களில் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மொத்தம் ஐந்து தடுப்பூசிகள் சுமார் 22 நாட்களில் போடப்பட்டன.
இதன் பிறகு கரணின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால், மேலும் இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. தற்போது கரண் முழுமையாக குணமடைந்துள்ளார்.
பள்ளிக்கும் சென்று வருகிறார். ரேபிஸின் இறுதிக்கட்ட அறிகுறிகளுடன் இருந்தும் கரண் உயிர் பிழைத்தது மருத்துவத் துறையில் மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |