ஐந்து தலை நாக வடிவில் அதிசய வாழை மரம்! நம்பமுடியாத புகைப்படம்
நாகப்பட்டினத்தில் வாழைமரத்தின் குலை மேல்நோக்கி வளைந்து செல்வதுடன், இது ஐந்து தலை நாகம் போன்று தோற்றமளிப்பது விசித்தரமாக உள்ளது.
பொதுவாக வாழைமரம் குலை தள்ளினால் கீழ் நோக்கி தான் பூ காய் வளர ஆரம்பிக்கும். ஆனால் இங்கு நடந்துள்ள விசித்திர சம்பவம் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காருகுடி பகுதியைச் சேர்ந்தவர் சிங்கார மீனாட்சி சுந்தரம்.
இவர் ராகு கேது நாக தோஷம் நிவர்த்தி ஸ்தலமான மகா மாரியம்மன் நாகம்மன் ஆலய தோட்டத்தில் வாழை மரத்தினை வளர்த்து வருகின்றார்.
திருமண தடை நிவர்த்திக்கு ராகு கேது நாக தோஷங்கள் நிவர்த்தி செய்ய வாழை மரத்தில் தாலி கட்டி பரிகாரம் செய்யப்படுவது வழக்கமாகும்.
அவ்வாறு பரிகார நிவர்த்தி செய்யப்பட்ட வாழை மரத்தில் ஒரு ஆச்சரியம் அரங்கேறியுள்ளது. அதாவது அம்மரத்தில் ஐந்து தலை நாகம் போன்று ஐந்து காய்களை உருவாகியுள்ளதுடன், வளைந்து மேல் நோக்கிய வண்ணம் வளர்கின்றது.
இந்த அசிய மரத்தை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதுடன், மரத்தில் மஞ்சள் துணி அணிவித்து, பூக்கள் சாற்றி வழிபாடும் நடைபெறுகின்றது
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |