கையில் பணம் தங்காமல் செலவாகுதா? கோடீஸ்வர யோகத்திற்கு இதை செய்ங்க
சம்பாதித்த பணம் கையில் தங்குதே இல்லை என கூறுபவர்களுக்கும் கவலைபடுபவர்களுக்கும் பதிவில் சாஸ்திர ரீதியாக கூறப்பட்ட ஒரு தீர்வு வழிமுறையை பார்க்கலாம்.
கோடீஸ்வர யோகம்
பணம் சம்பாதிக்க முடியவில்லை என்ற நபர்கள் ஒருபக்கம் இருக்க பணம் கைக்கு வருகிறதே இல்லை என்னும் நபர்கள் ஒருபக்கம் இருக்க சம்பாதித்த பணம் கையில் தங்குதே இல்ல செலவு தான் முழுக்க என்னும் நபர்கள் தான் இங்கே அதிகமாக இருக்கின்றனர்.
ஆனால் இது மூட நம்பிக்கை இல்லை. இதுவும் ஒரு வகையில் வேறு சில சாஸ்திர காரணங்களாகவும் இருக்கலாம்.
ஒவவொரு மனிதனுக்கும் ஒவ்வொன்றை ஈர்க்கும் சக்தி இருக்கும் அப்படி பணத்தை ஈர்க்கும் சக்தி இந்த உலகத்தில் எல்லோருக்கும் கொடுக்கவில்லை.

இதன் காரணமாக தான் ஒரு சில மனிதர்களுக்கு கஷ்டநிலை, பணப் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது. இதற்காக பல வகைகளில் பணத்தை ஈர்க்க ஒரு மனிதனால் முடியும் அதை அவன் புரிந்து கொண்டு செய்தால் நன்மை.
செல்வ நிலையில் முன்னேற்றம் பெற வேண்டும் என நினைப்பவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த, விரைவாக பலன் தரக் கூடிய இந்த ஒரு வழிபாட்டினை தொடர்ந்து செய்து வர வேண்டும் என பல சாஸ்திரங்கள் கூறுகின்றது.
செல்வ நிலை உயர வழிபாடு
செல்வ நிலை உயர வேண்டும் என்றால் அதற்கு மிகச் சிறந்த ஒரே வழிபாடு குபேரர் வழிபாடு தான். குபேர வழிபாட்டினை செய்வதற்கு மிக மிக ஏற்ற நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம் ஆகியவை நட்சத்திரங்கள் ஆகும்.
அதுவும் இதற்கு வெள்ளிக்கிழமை மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது. இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமையில் வரும் சுக்கிர ஹோரையில் செய்ய துவங்குவது சிறப்பு.

தினமும் மாலை 6 முதல் 8 மணிக்குள்ளான நேரம் குபேர வழிபாடு செய்வது விரைவான பலன்களை கொடுக்கும்.
தொடர்ந்து 108 நாட்கள் இந்த வழிபாட்டினை, ஒரு நாள் கூட இடை விடாமல் செய்வதால் மிக அற்புதமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகின்றது. 108 நாட்களும் வை இல்லை வெறும் 9 நாட்களிலேயே நீங்கள் நல்ல மாற்றத்தை உணரலாம்.
குபேர வழிபாடு எப்படி செய்யலாம்?
குபேரர் படம் ஒன்றை வாங்கிக் அதற்கு முன்பாக ஒரு நெய் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பின்னர் ஒரே மாதிரியான ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் என ஏதாவது 108 நாணங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
குபேரருக்கு நைவேத்தியமாக பஞ்சாமிர்தம் படைக்க வேண்டும். ஏதாவது ஒரு பழம், நெய், நாட்டு சர்க்கரை, தேன், கற்கண்டு சேர்த்து பஞ்சாமிர்தமாக தயாரித்து, அதை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

பின்னர் விளக்கேற்றி வைத்து விட்டு, குபேரருக்குரிய 108 நாமங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாமமாக சொல்லி, ஒரு நாணயத்தை எடுத்து, குபேரருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
அர்ச்சனை செய்து முடித்த பிறகு, தீப தூபம் காட்டி, நைவேத்தியமாக படைத்த பஞ்சாமிர்தத்தை வீட்டில் உள்ளவர்கள் பிரசாதமாக சாப்பிடலாம். குபேரருக்கு அர்ச்சனை செய்த நாணயங்களை செலவு செய்யாமல் பூஜைக்காக தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |