கெட்ட கொழுப்புகளை கரைத்து சுகரை ஓட விடும் கம்பு சாதம்! எப்படி செய்வது?
நாம் அடிக்கடி சாப்பிடும் தானியங்களில் கம்பு முக்கியமானது. இதில் பலவிதமான உணவுகளை வீட்டில் பெரியவர்கள் செய்வார்கள்.
கம்பு நீரிழிவு இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாகும்.
கம்பில் லோகிளைசெமிக் தன்மை இருக்கிறது. அதனால் நீரிழிவு இருப்பவர்கள் அச்சம் இன்றி எடுத்துகொள்ளலாம்.
நார்ச்சத்தும் நிறைந்தது. அதே சமயம் கம்பு கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.
எடையை குறைக்க விரும்பினால் தினமும் காலையில் கம்பில் செய்யும் உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள்.
கம்பு சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- கம்பு - 1 கப்
- தண்ணீர் - 2 1/2 கப்
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
கம்பு சாதம் ருசியாக செய்வதற்கு கம்பை நன்றாக கழுவி ஒரு கப் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பிறகு நன்றாக தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் 4 அல்லது 5 முறை சுற்றி எடுக்கவும்.
பார்க்கும் போது உடைத்த ரவைபோல ஆகிவிடும்.
உடைத்த கம்பை மீதமுள்ள 1 1/2 கப் தண்ணீருடன், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில்கள் விட்டு எடுக்கவும்.
குக்கர் சூடு ஆறிய பின்னர் வெளியில் எடுக்கவும்.
அரிசி வேகவைப்பதைவிட சற்று அதிக நேரம் வேகவிட வேண்டும்.
சுவையான கம்பு சாதம் தயார்.