நீரிழிவு நோயாளிகள் பால் டீ அருந்தலாமா? பலரது கேள்விக்கு இதோ பதில்
சர்க்கரை நோயாளிகள் பால் டீ குடிக்கலாமா? அல்லது குடிக்கக்கூடாதா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள் பால் குடிக்கலாமா?
பொதுவாக டீ என்றால் அனைவரும் விரும்பி அருந்தும் பானமாக இருக்கின்றது. ஆனால் இதனை சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா என்ற கேள்வி அநேகருக்கு தோன்றியிருக்கும்.
சர்க்கரை நோயாளிகள் என்ன உணவு சாப்பிட்டாலும் அதன் கிளைசெமிக் குறியீடு ரொம்பவே முக்கியம்.
எளிதில் ஜீரணமாகக் கூடியதும், பசி உணர்வை கட்டுப்படுத்தும் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பால் கலந்த டீ-யை பருகுவதால் எந்த பாதிப்பும் இல்லையாம்.
குறைந்த கொழுப்புள்ள பாலில் டீ போட்டு சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாம். மேலும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை அல்லது குறைந்த கிளசிமிக் கொண்ட இனிப்புகளை பயன்படுத்தவும்.
அளவு என்ன?
பால் டீ-யில் கார்போஹைட்ரேட் இருப்பதால், இதனை குறைந்த அளவு நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
பால் டீ-க்கு பதிலாக கிரீன், லெமன், பிளாக் டீக்களை எடுத்துக் கொள்ளலாம்.
பால் கலந்து டீ குடித்த பின்பு சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளவும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால், டீ குடிக்கும் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும்.
நீரிழிவு நோயாளிகள் காலை நேரத்தில் வெறும்வயிற்றில் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகுமாம். இதற்கு பதிலாக மாலை நேரத்தில் இனிப்பு சேர்க்காமல் குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |