லேசான இருமல் வந்தால் கூட புற்றுநோய் வருமாம்! புற்றுநோயின் அறிகுறிகள்
பொதுவாக தற்போது புற்றுநோய் பிரச்சினை அதிகரித்து வருகின்றது.
சிலர் புற்றுநோய் இருப்பதை முதலில் தெரிந்து கொண்டு அதனை சரிச் செய்து கொள்கிறார்கள்.
இன்னும் சிலர் இது தான் அறிகுறி என தெரியாமல் இருக்கிறார்கள்.
அத்துடன் புற்றுநோய் இருப்பவர்களுக்கு சில நேரங்களில் நோய் கடுமையான அறிகுறிகளை காட்டும், சில நேரங்களில் சாதாரணமான அறிகுறிகள் மட்டுமே தென்படும்.
அந்த வகையில் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
Image - Medical News Today
1. லேசான இருமல்
பெண்ணொருவருக்கு நீண்ட காலமாக இருமல் இருந்துள்ளது. அந்த பெண்ணும் சாதாரண இருமல் தானே என இருந்துள்ளார். திடீரென ஒரு நாள் இருமல் முற்றியது.
வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்து பார்த்த போது புற்றுநோய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வருடத்திற்கு ஒரு முறை சரி முழு உடலையும் பரிசோதித்து கொள்ள வேண்டும்.
2. நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல்புற்றுநோயானது புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்துவது ஆகிய பிரச்சினைகளால் ஏற்படுகின்றது. இது போன்ற பழக்கங்கள் இருக்கும் போது 2 வாரங்களுக்கு மேல் தொடர் இருமல், நாள்பட்ட இருமல் போன்ற சில அறிகுறிகள் தோன்றினால், மருத்துவரை அணுகுவது நல்லது.
அத்துடன் எடை இழப்பு, எலும்பு / மூட்டு வலி, சோர்வு, தலைவலி, முகம் அல்லது கைகளில் வீக்கம், இருமும் போது ரத்தம் சுவாசிப்பதில் சிரமம், மார்பு வலி, மூச்சுத்திணறல், கரகரப்பு, ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
3. நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை
பொதுவான மரபணு மாற்றங்கள் புற்றுநோய் EGFR, KRAS மற்றும் ALK மரபணுக்களில் உள்ளது. EGFR புரதத்தின் பிறழ்ந்த வடிவங்களை இலக்காகக் கொண்ட சிகிச்சை முறைகள் கூட மேற்கொள்ளப்படும். ஆகையால் பயம் கொள்ளாமல் புற்றுநோய் இருந்தால் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |