நள்ளிரவில் கடலுக்கடியில் உருவான பயங்கரமான நிலநடுக்கம்; எச்சரிக்கை விடுத்த நாடுகள்
தென்பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடற்கரை பகுதிகளுக்கு அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறப்பட்டு இருப்பதாவது: பிரான்சின் நியூ கலிடோனியா அருகே தீவு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7ஆக பதிவு ஆகி உள்ளது.
இதனைத்தொடர்ந்து, நியூசிலாந்து நாட்டு அதிகாரிகள் தென் பசிபிக் கடற்கரை யோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் படி அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும், பிரான்சின் நியூ கலிடோனியா தீவு உள்ளிட்ட தென் பசிபிக் கடற்கரையோரம் வசிப்பவர்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.