நள்ளிரவில் வீடு திரும்பிய கணவர்.. கட்டிலுக்கு அடியில் கண்ட அதிர்ச்சி! பின்பு நடந்த அசம்பாவிதம்
இந்திய மாநிலமான தமிழகத்தில் கணவருக்கு தெரியாமல் காதலனை கட்டிலுக்கு மறைத்து வைத்த மனைவி, கணவர் செயலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த உள்ளியக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு கல்யாணமாகி நாகலட்சுமி என்ற மனைவி உள்ளது.
இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேல்முருகன், பணிபுரிந்து வருகிறார். வேல்முருகன் வேலைக்கு சென்ற பின் வீட்டில் தனியாக மனைவி நாகலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில் வேல்முருகன் வீடு திரும்பியுள்ளார்.
கதவை நீண்ட நேரம் தட்டியும் மனைவி நாகலட்சுமி திறக்காமல் இருந்ததால் தூங்கியிருப்பார் என்று நினைத்துள்ளார். அதன்பின்பு கதவைத் திறந்த பின்பு வீட்டிற்குள் சென்று தனது ஆடையை மாற்றிய போது கட்டிலுக்கு அடியில் ரமேஷ் மறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, இருவரையும் அடித்ததோடு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
ஆனால் காவல்நிலையத்தில் காலையில் வந்து புகார் கொடுங்கள் என்று வேல்முருகனை அனுப்பியுள்ள நிலையில், வீட்டிலிருந்த மனைவி நாகலட்சுமி கணவருக்கு தனது காதல்விவகாரம் தெரிந்துவிட்டதை நினைத்து வேதனைப்பட்டதோடு, அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்கு வந்து பார்த்த வேல்முருகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.