பேரதிர்ச்சி.... மெட்டி ஒலி சீரியலில் நடிகை திடீர் மரணம்! கதறும் ரசிகர்கள்
மெட்டி ஒலி சீரியலில் நடித்த உமா மகேஸ்வரி இன்று சென்னையில் காலமானார்.
திருமுருகன் இயக்கி நடித்த மெட்டி ஒலி சீரியலில் அவருக்கு மனைவியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கால்நடை மருத்துவமரை திருமணம் செய்த பிறகு உமா மகேஸ்வரியை சீரியல்களில் பார்க்க முடியவில்லை.
அவர் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் உமா மகேஸ்வரி இன்று காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு உடல்நலக் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உமா மகேஸ்வரியின் மரணம் குறித்து அறிந்த பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.