கணவர் துரோகத்தால் இழந்த 100 கோடி சொத்து! நடுத்தெருவில் தவித்த மெட்டிஒலி நடிகை
பிரபல ரிவியில் ஒளிபரப்பான சித்தி மற்றும் மெட்டிஒலி சீரியலில் நடித்து பிரபலமானா நடிகை சாந்தி வில்லியம்ஸ் தனது சோகமான வாழ்க்கையை பகிர்ந்துள்ளார்.
சாந்தி வில்லியம்ஸ்
சீரியிலில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கி ஒட்டுமொத்த பெண்களின் வெறுப்பை சம்பாதித்தவர் தான் சாந்தி வில்லியம்ஸ். ஆம் இவை திட்டித் தீர்க்காத பெண்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
சித்தி, மெட்டிஒலி சீரியலில் இவரது நடிப்பை தற்போதும் யாராலும் மறக்கவே முடியாது. ஏகப்பட்ட சீரியல் மற்றும் படங்களில் நடித்த இவர் சமீபத்தில் தனது வாழ்க்கையின் துரோகத்தை பற்றி பேசியுள்ளார்.
20 வயதான நடிகை சாந்தியை 46 வயது கமெரா மேன் ஒருவர் திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு பிடிக்கவே இல்லையாம்.
ஆனாலும் குறித்த நபர் தற்கொலை செய்வதாக மிரட்டி சாந்தியை திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.
சொத்துக்களை இழந்த சாந்தி
அவரை திருமணம் செய்து கொண்ட சாந்திக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். கணவருக்கு கார் மேல் அதிகம் பிரியம் என்பதால் விதவிதமான கார்களை வாங்கி குவித்துள்ளார்.
இதனை பராமரிப்பதற்காக சொத்துக்களை விற்றதுடன், படம் எடுப்பதாக கூறி நஷ்டத்தை சந்தித்து இறுதியில் இருந்த சொத்துக்கள் அனைத்தும் போய்விட்டது.
தற்போதைய மதிப்பு ரூ.100 கோடி விலை போகும் வீட்டை கடனுக்காக விற்றதுடன், குழந்தைகளுடன் நடுத்தெருவிற்கு சாந்தி வந்துள்ளார்.
பின்பு கஷ்டப்பட்டு மேலே வந்த சாந்தி, தனது கணவரிடம் அவர் செய்த துரோக்கத்தால் 18 ஆண்டுகள் பேசாமல் இருந்ததுடன், கடின உழைப்பால் முன்னேறியுள்ளார்.
தனது உழைப்பு குறித்து கூறுகையில், பிள்ளைகளுக்காக சம்பாதித்த நான் தற்போது பேரப்பிள்ளைகளுக்காக சம்பாதிக்கின்றேன். இவ்வாறு தான் தனது வாழ்க்கையில் இருக்கும் வித்தியாசம் என்று கூறியுள்ளார்.