உலக கோப்பையின் மீதுள்ள ஆசையில் கட்டியனைத்தப்படி தூங்கிய வீரர்! அதிர்ந்து போன நெட்டிசன்கள்!
சுமார் 17 ஆண்டுகால தவிப்பின் பின்னர் உலகக்கோப்பையை வென்று நட்சத்திர வீரர் மெஸ்ஸி, தன்னுடைய படுக்கையில் உலகக்கோப்பையை தழுவிய படி தூங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை
கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை 2022ல் பிரான்சுக்கு எதிரான பரபரப்பாக நடைப்பெற்றது.
இதில் அர்ஜென்டினா அணி பெனால்டிசூட் முறையில் 4-2 என்ற கணக்கில் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
மேலும் இதில் நட்சத்திர வீரராக காட்சியளித்த லியோனல் மெஸ்ஸி. இந்த உலககோப்பையுடன் சேர்த்து அர்ஜெண்டினா அணிக்கு மூன்றாவது முறையாக வெற்றியீட்டிக் கொடுத்துள்ளார்.
வைரலாகும் புகைப்படங்கள்
இந்நிலையில் இந்த உலககோப்பையுடன் சேர்ந்து தன்னுடைய குடும்பம், நண்பர்கள் என பல புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதில், மெஸ்ஸி தன்னுடைய படுக்கையில் உலககோப்பையை கட்டிபிடித்தவாறு தூங்கிய புகைப்படத்தை ஸ்பானிஷ் மொழியில் "குட் மார்னிங்" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பதிவிட்டு வருகிறார்கள்.
இதனை பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்ததுடன் உலககோப்பை மீது அவ்வளவு ஆசையா? கலாய்க்கும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.