மணமகனுக்கு மெசேஜ் அனுப்பிய மணமகள்: அடுத்த நிமிஷமே திருமணத்தை நிறுத்திய மணமகன்!
திருமணத்திற்கு முன்பாக மணமகள் அனுப்பிய மெசேஜை பார்த்து மாப்பிள்ளை எடுத்த முடிவு தொடர்பான செய்தி தற்போது இந்தியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
திருமணம் என்றாலே சந்தோஷம், துக்கம், குதுகலம், கொண்டாட்டம், சண்டை என எல்லாம் கலந்த கலவையாகவே இருக்கும். திருமணத்தில் ஆண், பெண் இருவருக்குமே பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் இருக்கும்.
இவ்வாறு எதிர்பார்த்த மணப்பெண்ணுக்கு இப்படியொரு நிலைமையா? என கேட்கும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நின்றுபோன திருமணம்
இந்திய மாநிலம் அசாமில் கவுகாத்தி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கும், ஹவுலி நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு இருக்கையில் இருவரும் தங்களது செல்போன் இலக்கங்களையும் மாற்றிக் கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.
வருங்கால மனைவிக்கு பரிசு
இப்படி ஒரு சூழலில் தனது வருங்கால மனைவிக்காக சில பரிசுகளை அந்த வாலிபர் அனுப்பி வைத்துள்ளார். மேலும், அவர் அனுப்பிய பரிசில் ஷாம்பூ உள்ளிட்ட சில பொருட்கள் இருந்துள்ளது.
பொருட்களை பார்த்ததும் அந்த மணப்பெண் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு மெசேஜ் ஒன்றை மாப்பிள்ளைக்கு அனுப்பி உள்ளார்.
அதில், 'ஒரு பொறியாளராக இருந்து கொண்டு மலிவான ஷாம்பூவை அனுப்பி வைத்துள்ளீர்களே, இதுதான் உன் லெவலா?' என கேட்டுள்ளார்.
வருங்கால மனைவி என கருதிய பெண்ணிடம் இருந்து வந்த இந்த மெசேஜ், அந்த வாலிபரை அவமானப்படுத்தியது போல உணர வைத்துள்ளது.
திருமணம் வேண்டாம்
இதனால் இந்த திருமணம் வேண்டாம் நிறுத்தி விடலாம் என்று அவர் கூறியுள்ளார். இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த மணப்பெண், தனது பெற்றோரிடம் இது பற்றி கூற உடனடியாக அனைவரும் சென்று மாப்பிள்ளையை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.
ஆனாலும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
மலிவான ஷாம்பூ வாங்கி அனுப்பியதாக வருங்கால மனைவி அனுப்ப மெசேஜ் பார்த்து திருமணத்தை நிறுத்த இளைஞர் முடிவெடுத்த நிலையில், இது தொடர்பில் வழங்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.