இதையெல்லாம் மெசேஜில் சொல்லிராதீங்க...ஆபத்தாம்!
உலகமே தற்போது கையடக்கத் தொலைபேசியில் அடங்கிவிட்டது. உறவுகள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களை இலகுவில் தொடர்பு கொள்ள முடிகிறது. அந்த தொடர்பு அவர்களை நம் அருகில் இருப்பதைப் போல் உணர வைக்கிறது.
அதுவும் காதலர்களுக்கு கையடக்கத் தொலைபேசி மிகப்பெரும் பரிசு. தங்கள் அன்பையும் கோபத்தையும் வெளிக்காட்ட அதுவே சிறந்த சாதனமாக உள்ளது.
சில காதலர்கள் தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து குறுஞ்செய்திகள் மூலம் தமது உரையாடலைத் தொடர்வர். ஆனால், குறுஞ்செய்திகள் மூலமான உரையாடல் அவ்வளவு தெளிவானதாகவும் நாம் உணரும் விதத்தை அப்படியே வெளிக்காட்டுவதாகவும் அமையாது.
சில வேளைகளில் நாம் மனதில் நினைக்கும் விடயங்களை குறுஞ்செய்தி மூலம் சரியாக வெளிப்படுத்த இயலாமல் இருக்கும்.
இது குறிப்பிட்ட அந்த உறவின் முறிவுக்குக் கூட காரணமாக இருக்கலாம். இனி குறுஞ்செய்திகளில் என்னென்ன விடயங்களைப் பற்றி பரிமாறிக் கொள்ளக் கூடாது என்பதை பார்ப்போம்...
ரகசியங்களை பகிர வேண்டாம்
நம்மைப் பற்றி முக்கிய விடயங்களை ஒருபோதும் குறுஞ்செய்திகளில் பகிரக் கூடாது. ஏனெனில் எதிர்பாராத விதமாக நாம் யாருக்கு அந்த செய்தியை பரிமாறுகிறோமோ அவரல்லாமல் வேறு யாரேனும் அதை பார்த்துவிடக் கூடும். இது சில வேளைகளில் ஆபத்தில் போய் முடியலாம்.
வாக்குவாதங்கள் வேண்டாம்
இது பொதுவாக அனைத்து காதலர்களுக்கிடையேயும் இருக்கும் ஒரு பழக்கமாகும். இது நேருக்கு நேர் பேசி முடிக்கும்போது இலகுவாக தீர்ந்துவிடும். ஆனால், குறுஞ்செய்தியில் பரிமாற்றங்கள் நடக்கும்போது அவ்வளவு எளிதில் அது முடியாது.
மன்னிப்பு கேட்காதீர்கள்
எவ்வளவு பெரிய விடயமானாலும் சரி குறுஞ்செய்தியில் மன்னிப்பு கேட்காதீர்கள். உங்களது துணைக்கு தேவையான நேரத்தையும் இடத்தையும் கொடுத்து பேசுங்கள்.
விரக்தி
நமக்குள் விரக்தி உணர்வு அதிகமாகும்போது அதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் போல் இருக்கும். அவ்வாறு இருக்கும் சந்தர்ப்பங்களில் அதை நேரில் பகிர்ந்துகொள்வதே சிறந்தது. ஏனென்றால் குறுஞ்செய்தியில் அது தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.
உண்மைகள்
உங்களைப் பற்றிய உண்மைகளை உங்கள் துணையிடம் நேரடியாகவே பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கலாம்.