12 மாதங்களின் பின் சொந்த ராசியில் புதன் பெயர்ச்சி : நிதி நிலையில் பலனடைய போகும் 3 ராசிகள்!
வேத ஜோதிடப்படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதன் தாக்கம் மனித வாழ்க்கையில் ஆழமான பிரதிபிப்பை ஏற்படுத்துகின்றன.
அவற்றில் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுபவர் புதன்.மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், சந்திரனுக்கு அடுத்தபடியாக விரைவாக ராசி மாறும் கிரகமாகும்.

புதன் ஆகஸ்ட் 22-ம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்து, செப்டம்பர் 7-ம் தேதி தனது சொந்த ராசியான கன்னியில் நுழைகிறார். இதனால் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களைப் பெறுவர்.
குறிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் நிதி நன்மைகளும், தொழிலில் வெற்றிகளும் குவியப் போகின்றன. அப்படி புதன் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் அந்த ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் 5-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நேர்மறையான பலன்கள் கிடைக்கும். நிதி நிலை மேம்பட்டு, கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டுவீர்கள்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமும், பணியிடத்தில் புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம்.
கன்னி

கன்னி ராசியின் 2-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். ஆன்மீக பயணங்களுக்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
மாணவர்கள் படிப்பில் சிறந்து, நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பொருள் இன்பங்கள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும்.
தனுசு

தனுசு ராசியின் 11-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைத்து, வாழ்க்கைப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
நீண்ட தூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மனநிலை மேம்பட்டு, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |