புதன் பெயர்ச்சியால் பொற்காலம் தொடங்கும் 3 ராசிகள்: பணவரவும் வெற்றியும் அதிகரிக்கும்!
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், குறுகிய காலத்திலேயே தனது நிலையை மாற்றக்கூடியவர்.
தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில், செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னிக்குள் நுழைகிறார். சுமார் 1 ஆண்டுக்குப் பிறகு புதன் தனது சொந்த ராசிக்கு திரும்புவதால், பத்ர ராஜயோகம் உருவாகிறது.

பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான இந்த யோகம், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.எனினும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தின் மூலம் நல்ல வெற்றி, புகழ், பணம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைப் பெறவுள்ளனர்.
அப்படி செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 6-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.
பணியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியின் 2-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.
குறிப்பாக, புதனின் அருளால் புதிய தொழிலைத் தொடங்கும் முடிவையும் எடுக்கக்கூடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு

தனுசு ராசியின் 10-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் நீண்ட காலமாக மேற்கொண்ட கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
அதேசமயம், நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும்.
புதிய முதலீடுகளை மேற்கொண்டாலும் நல்ல வருமானம் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக நிறைவடையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW . |