புதன் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்... உங்க ராசி இதில் இருக்கா?
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சாற்றல், கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார். இவரது நிலையில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், தற்போது துலாம் ராசியில் பயணித்து வரும் புதன், டிசம்பர் 2ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய், தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சலின் காரணியாகக் கருதப்படுகிறார்.

இந்நிலையில், செவ்வாயின் ராசியில் புதன் நுழைவதால் 12 ராசிகளிலும் அதன் தாக்கம் காணப்படும். குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் சிறப்பான வளர்ச்சி, எதிர்பாராத லாபம் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும் என ஜோதிட நிபுணர்களால் கணிக்ப்பட்டுள்ளது.
அப்படிப் புதன் பெயர்ச்சியால் நிதி, தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இரட்டிப்பு அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்கு 7-ஆம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால், பணம் தொடர்பாக இருந்து வந்த கவலைகள் படிப்படியாகக் குறையும். கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் உருவாகும்.
அதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் நல்ல பலனைத் தரும். வேலையில் இருப்பவர்கள் தங்களுடைய திறமைகளை நிரூபிக்கப் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கலாம் அல்லது கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழில் செய்பவர்களுக்கு லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கன்னி

கன்னி ராசியின் 3-ஆம் வீட்டிற்கு புதன் செல்வதால், நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகளைச் சிறப்பாக முடிப்பீர்கள்.
வேலை தேடுபவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்குச் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம்.
வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் தங்களுடைய திட்டங்கள் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கான சாதகமான சூழல் உருவாகும்.
மகரம்

மகர ராசியின் 11-ஆம் வீட்டிற்கு புதன் சஞ்சரிப்பதால், பணியிடத்தில் நீங்கள் இதுவரை செய்த கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக அறிமுகமாகும் நபர்களுடனான நட்பு எதிர்காலத்தில் பல வழிகளில் உதவியாக இருக்கும்.
உங்கள் மீது நம்பிக்கை வைத்து, நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த திட்டங்களைத் துணிச்சலுடன் செயல்படுத்துவீர்கள். அதற்கேற்ற நல்ல பலன்களும் கிடைக்கும்.
மிதுனம்

மிதுன ராசியின் 6-ஆம் வீட்டிற்கு புதன் செல்வதால், எந்தச் செயலையும் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.
அலுவலகத்தில் நீங்கள் முன்வைக்கும் கருத்துகளுக்கும் புதிய யோசனைகளுக்கும் மேலதிகாரிகளிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
உங்களுடைய செயல்பாடுகளைக் கவனித்து பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகளை வழங்கவும் வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பாக சந்தைப்படுத்தல், ஊடகம் மற்றும் கல்வித்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இந்தப் புதன் பெயர்ச்சி சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |