அள்ளி கொடுக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு இனி பணம் கொட்டப்போகுது
மே 29 ஆம் தேதி புதன் மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகி உள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

புதன் பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் தான் புதன் பகவான். இவருடைய ஒவ்வொரு அசைவும் ராசிகளுககு மிக முக்கியமானது.
புதன் பகவான் மே 29 ஆம் தேதி அன்று காலை 11.12 மணியளவில் தனது சொந்த வீடான மிதுன ராசிக்குள் நுழைந்துள்ளார்.
ஜூன் மாதத்தில் மிதுன ராசியில் புதனின் ஆதிக்கம் வலுவடைகிறது என ஜோதிடம் சொல்கிறது.
இந்த பெயர்ச்சி பல ராசிகளின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை கொண்டு வரப்போகிறது. அந்த ராசிகள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
- புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
- உடன்பிறப்புகளுடனான உறவு வலுவடையும்.
- புதிய நண்பர்கள் மற்றும் நல்ல தொடர்புகள் உருவாகும்.
- நீண்ட நாட்களாக மனதை வருத்திய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தையும் புதிய வாய்ப்புகளையும் பெறுவார்கள்.
மிதுனம்
- இந்த காலம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
- எதிர்பாராத பணவரவு மற்றும் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம்.
- வருமானத்தை அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
- பணப்புழக்கம் சீராக இருப்பதால் பொருளாதார நெருக்கடிகள் குறையும்.
- ஆன்மீக செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரித்து மனநிம்மதி கிடைக்கும்.
கடகம்
- கடக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலை தொடர்பாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் காலமாக இது அமையும்.
- மன அழுத்தம் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடமிருந்து நல்ல செய்திகள் வரலாம்.
- பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
- உடல்நலத்தில் மட்டும் சிறிது கவனம் செலுத்துவது நல்லது.
சிம்மம்
- சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபம் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும் காலம் இது.
- நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும்.
- தொழில் மற்றும் பணியிடத்தில் உழைப்புக்கு தகுந்த பலன்களும் பாராட்டுகளும் கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
- மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் கல்வியில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.
கன்னி
- கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களை வழங்கும்.
- கடின உழைப்பிற்கு தகுந்த அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பு உயரும்.
- குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மற்றும் மனக்கவலைகள் நீங்கும்.
- ஆரோக்கியம் மேம்படும்.
- புதிய முயற்சிகள், திட்டங்கள் மற்றும் முதலீடுகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).