புதன் அருளால் கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்! பன்மடங்கு வளர்ச்சி பெறும் 4 ராசிகள்
புதன் கிரகம் 27 நாட்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறது. ஆனால் ஒரு ராசியில் புதன் வக்ரமாக இருக்கும்போது, அதாவது பிற்போக்கு நகர்வில் இருக்கும்போது, அது நீண்ட காலத்துக்கு அந்த நிலையில் இருக்கும்.
இந்த நேரத்தில் புதன் ரிஷப ராசியில் இருக்கிறார். இப்போது அவர் வக்ர நிலையில் சஞ்சரித்து வருகிறார். நாளை அதாவது ஜூன் 3 முதல் புதன் நேராக தன் இயக்கத்தை தொடங்குகிறார்.
புதனின் இந்த மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். இந்த ராசிக்கார்ரகள் தொழில் மற்றும் பொருளாதார நிலையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
மார்க்கியாக, அதாவது நேரான இயக்கத்தில் இருக்கும் புதன் எந்த ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றி அனுகூலமான சூழலை உருவாக்கப் போகிறார் என இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்:
புதன் ரிஷப ராசியில்தான் நிலை மாறுகிறார். புதனின் நேரடி இயக்கம் ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். தொழில் மற்றும் வாழ்வில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். இந்த காலத்தில் ரிஷப ராசிக்கார்ரகள் பெரிய முன்னேற்றத்தை அடைய முடியும்.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல, புதிய வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கக்கூடும். வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுனம்:
புதனின் சஞ்சாரத்தால் மிதுன ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். மேன்மையான புதிய வேலை கிடைக்கலாம். வீட்டில் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். தாயின் சிறப்பு அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் / மனைவி, குழந்தைகளால் வீட்டில் குதூகலம் பிறக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
கன்னி:
ஜூன் 3 முதல் கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் நிலை நன்மைகளை தரும். குறிப்பாக தொழிலதிபர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும்.
வீட்டில் ஆன்மீக காரியங்கள், சுப காரியங்கள் ஆகியவை நடக்க வாய்ப்புண்டு. இந்த நேரத்தில் அதிக லாபம் ஈட்டுவீர்கள்.
குடும்பமாக சுற்றுலா செல்லும் வாய்ப்பும் உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். அதனால் சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.
மகரம்:
ஜூன் 3 முதல் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். வியாபாரம் பெருகும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். இடமாற்றத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த மாற்றங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித்தரும்.
பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகளையும், பரிசுகளையும் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் பல குடும்பத்தில் நடக்கும்.