கன்னியில் புதன் உதயம்: தொழில் கொடிகட்டி பறக்கப்போகும் டாப் 3 ராசிகள்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நவகிரகங்களின் நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
நவகிரகங்களில் புதன் அறிவு, பேச்சு, வணிகம், தகவல் தொடர்பு மற்றும் நிதி சார்ந்த விஷயங்களின் அதிபதியாகக் கருதப்படுகிறார்.

புதன் தனது பலவீனமான நிலையிலிருந்து விடுபடும்போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வலுவாக இருக்கும்.
2026 செப்டம்பர் 14-ஆம் தேதி அதிகாலை 2:52 மணிக்கு புதன் கன்னி ராசியில் உதயமாகிறார். ஜோதிட சாஸ்திரப்படி, கன்னி ராசி புதனின் சொந்த ராசியாகவும், உச்சம் பெறும் ராசியாகவும் கருதப்படுகிறது.
இதனால் வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தும்.புதனின் இந்த உதயத்தால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு, புதன் அவர்களின் சொந்த ராசியிலேயே உதயமாவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
இது தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக இது சிறப்பான காலமாக அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்

மிதுன ராசியின் அதிபதியாக புதன் இருப்பதால், அவரது உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். சரியான முயற்சிகள் மூலம் வெற்றியை எளிதில் அடைய முடியும்.
அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும், கடின உழைப்புக்கான அங்கீகாரமும் கிடைக்கும். கடந்த கால முயற்சிகளும் தற்போது நல்ல பலன்களைத் தரும். நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.
குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிவடையும்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சாதகமான பலன்களைத் தரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில்முனைவோருக்கு புதிய திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்டகால நிதி இலக்குகளை நோக்கிச் செயல்படுபவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையலாம்.
இந்தக் காலகட்டத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். பல்வேறு காரணங்களுக்காக பயணம் செல்லும் வாய்ப்புகளும் உருவாகலாம். எதிர்பாரா பணவரவு கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |