புதனின் விசாக நட்சத்திரப் பெயர்ச்சி: இனி இந்த ராசிகளுக்கு யோகம்தான்!
Mercury's Nakshatra Transit: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றத்தைப் போலவே நட்சத்திர மாற்றமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், நவகிரகங்களின் இளவரசனான புதன், புத்திக்கூர்மை, கல்வி, வணிகம், பேச்சாற்றல் மற்றும் தகவல் தொடர்பின் காரகராக விளங்குகிறார். எனவே, புதனின் நட்சத்திரப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படும் என்று நம்ப்படுகின்றது.

தற்போது துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் புதன், வரும் நவம்பர் 25ஆம் தேதி விசாக நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்.
ஜோதிடக் கணிப்புகளின்படி, இந்த நட்சத்திர மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கப்போகின்றது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம.
ரிஷபம்

புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவது ரிஷப ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தரும். இதனால் நிதிநிலை மேம்படுவதுடன், நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட பணிகளும் முடிவுக்கு வரம்.புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும்.
வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கலாம். குறிப்பாக, தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
தொழிலில் அடுத்த கட்ட வளர்ச்சியை அடையவும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், துணையுடனான உறவில் நெருக்கமும் அதிகரிக்கும்.
மிதுனம்

புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவது மிதுன ராசியினருக்குத் தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும்.
முடிவெடுக்கும் திறன் மேம்படுவதுடன், வேலையில் புதிய பொறுப்புகளும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம்.
வேலை மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்குப் புதிய வேலை மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்டகால மன அழுத்தம் குறைந்து நிம்மதி ஏற்படலாம்.குடும்பப் பிரச்சினைகளும் உடல்நலக் குறைபாடுகளும் படிப்படியாகச் சீராகும்.
தனுசு

புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவது தனுசு ராசியினருக்கு நிதி மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றத்தை கொடுக்கும்.
வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணிகளைச் சரியான நேரத்தில் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்குப் பொருத்தமான தானாகவே அமையும். பணிபுரிபவர்களுக்குப் புதிய பொறுப்புகளும் மரியாதையும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்குத் தேங்கிக் கிடக்கும் பணிகளை முடிக்கவும், புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் பெறவும் வாய்ப்புள்ளது. அவர்களின் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத் திறனும் மேம்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |