சனி, புதன் சேர்க்கையால் ஏற்படும் அதிர்ஷ்டம்... மூன்று ராசியினர் யார் யார்னு தெரியுமா?
புதன் மற்றும் சனி இவற்றின் சேர்க்கையினால் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசியினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதன், சனி சேர்க்கை
ஜோதிட ரீதியில் கிரகங்களின் ஒவ்வொரு அசைவுகளும் ஒவ்வொரு ராசியினருக்கும் சில மாற்றத்தினை கொடுக்கின்றது. இதில் முக்கியமான கிரகமாக புதன் மற்றும் சனி பார்க்கப்படுகின்றது.
ஏப்ரல் மாதத்தில் மீன ராசிக்குள் புதன் நுழைய இருக்கும் நிலையில், ஏற்கனவே மீன ராசியில் சனி பகவான் இருக்கும் நிலையில், இந்த புதன் மற்றும் சனி சேர்க்கையானது 30 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறுகின்றது.
இந்த சேர்க்கையினால் அனைத்து ராசியினரும் பலனை அனுபவிக்கும் நிலையில், அதிக பலன்களை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியில் சனி மற்றும் புதனின் சேர்க்கை லாப வீடான 11ம் வீட்டில் நடைபெறுவதால், நிதி ரீதியான பலன்கள் அதிகரிப்பதுடன், தொழிலில் அதிக லாபமும் கிடைக்கின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், புதிய தொழில் ஒப்பந்தங்கள், புதிய முதலீடுகளையும் செய்வீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியினை புதன் ஆழும் நிலையில், இந்த சேர்க்கையினால் சிறப்பான பலன்களை பெற முடிகின்றது. எந்த காரியத்திலும் வெற்றி கிடைப்பதுடன், தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காலக்கட்டத்தில் தொடங்கலாம். நிதி ரீதியான சிக்கலும் தீர்வதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கின்றது.

மீனம்
மீன ராசியில் முதல் வீட்டில் புதன் மற்றும் சனியின் சேர்க்கை நடைபெறும் நிலையில், அமோகமான காலமாக இருக்குமாம். வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு இந்த சேர்க்கையில் நடைபெறும் நிலையில், வேலையில் பொறுப்பு அதிகரித்து உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |