சனி, புதன் சேர்க்கையால் ஏற்படும் அதிர்ஷ்டம்... மூன்று ராசியினர் யார் யார்னு தெரியுமா?
மீன ராசியில் புதன் மற்றும் சனியின் சேர்க்கை நடப்பதால், 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெற உள்ளனர். அது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
ஜோதிடத்தின்படி, புதன் மற்றும் சனி என இரு கிரகங்களுமே முக்கியமானவை. இந்த கிரகங்களின் ஒவ்வொரு அசைவுகளும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில், புதன் வரும் ஏப்ரம் மாதத்தில் மீன ராசிக்குள் நுழைய இருக்கிறார். மீன ராசியில் ஏற்கனவே சனி பகவான் இருக்கிறார். இதன் காரணமாக சனி மற்றும் புதன் சேர்க்கை நடக்கிறது. இது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கிறது. இந்த சேக்கையினால் அனைத்து ராசியினரும் பலன்களை பெற்றாலும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டும் அதிக பலன்களை பெற இருக்கின்றனர். அப்படி சனி மற்றும் புதன் சேர்க்கையால் அதிக பலன்களை பெறக்கூடிய ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.

ரிஷபம்
சனி மற்றும் புதனின் சேர்க்கை ரிஷப ராசியின் லாப வீடான 11ஆம் வீட்டில் நடக்கிறது. இதனால் ரிஷப ராசிக்காரர்கள் நிதி ரீதியான பலன்களை பெற இருக்கின்றனர். அவர்களின் தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் பெரிய ஒப்பந்தங்கள் வரும். புதிய முதலீடுகளை இந்த காலகட்டத்தில் செய்யலாம்.

மிதுனம்
மிதுன ராசியை புதன் ஆள்கிறது. இந்த நிலையில், புதன் மற்றும் சனியின் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை வழங்க இருக்கிறது. எந்த காரியங்களை கையில் எடுத்தாலும் வெற்றி பெற முடியும். தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காலகட்டத்தில் தொடங்கலாம். நிதி ரீதியான சிக்கல் இருந்தால் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களால் படிப்பில் சாதிக்க முடியும்.

மீனம்
புதன் மற்றும் சனியின் சேர்க்கையானது மீன ராசியின் முதல் வீட்டில் நடக்கிறது. இது மீன ராசிக்காரர்களுக்கு அமோகமான ஒரு காலத்தை கொடுக்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு வரும். அதனை மேற்கொள்ளும் பட்சத்தில் சிறந்ததாக அமையும். வேலையில் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |