வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்... சிறிது நேரத்தில் கேட்ட கூச்சல் சத்தம்! நடந்தது என்ன?
வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு தனியாக இருந்த பெண்ணை நபர் ஒருவர் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. கோவை செல்வபுரம் தில்லைநகரை சேர்ந்தவர் திலீப்குமார் (28). நகைபட்டறை தொழிலாளியான இவரை மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்கொடுமை செய்துள்ளார்.
ஆம் மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் வீட்டில் தனியாக இருந்த நிலையில், பெண்ணை திலீப்குமார் வன்கொடுமை செய்ததுடன், அதனை காணொளியாகவும் எடுத்துள்ளார். பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் வந்த நிலையில், திலீப்குமாரை மடக்கிபிடித்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த செல்போனை அவதானித்த போது, வன்கொடுமை காட்சியும் பதிவாகி இருந்துள்ளது.
பின்பு கைது செய்யப்பட்ட திலீப்குமாரை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதோடு, சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதனைக்காக பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.