வெள்ளப் பேரழிவிலும் கொடூர கொள்ளை – சடலங்களில் இருந்து நகைகள் திருட்டு
நேபாள வெள்ளம்: வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்த ஒரு கும்பல், சடலங்களில் இருந்த நகைகளை திருடும் அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வைரலாகும் காணொளி
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.
சடலங்களை அவமதித்து, அவற்றில் இருந்த நகைகளை கொள்ளையடித்த உமேஷ் மற்றும் மதன் ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவில் ஏற்கனவே பெரும் இழப்புகளை சந்தித்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கூட விட்டுவைக்காமல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நபர்கள் உள்ளனரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
मृतकको कानको मुन्द्रा चोरी गर्ने व्यक्तिहरु नियन्त्रणमा लिएको सम्बन्धमा । pic.twitter.com/pnPlnQPn9j
— Nepal Police (@NepalPoliceHQ) August 27, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |