கோவிலில் நடிகர் சிம்பு! வைரலாகும் தரிசன புகைப்படம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது வரை மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன.
இந்நிலையில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட நடிகர் சிம்பு, அவ்வப்போது கோவில்களுக்கு செல்வதை வழக்கமாகி கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது, கர்நாடகாவில் உள்ள முருதீசுவரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
அங்குள்ள பிரம்மாண்ட சிவன் சிலை முன்பு சிம்பு, சாமி தரிசனம் செய்தவாறு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.