இன்று பிறந்தநாளான நடிகை மீரா ஜாஸ்மினுக்கு 43 வயதில் சொத்து மதிப்பு இவ்வளவா?
43 வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு தற்போது இருக்கும் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மீரா ஜாஸ்மின்
மாதவன் நடித்த ரன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவரது உண்மையான பெயர் ஜாஸின் மேரி ஜோசஃப்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் நடித்து தன்க்கென ரசிகர் பட்டாளம் ஒன்றை வைத்துள்ளார். மலையாள படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
இவர் நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. மற்றைய படங்கள் எல்லாமே நல்ல ஹிட் அடித்துள்ளது. இவர் அனில் ஜான் டைட்டஸை 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தான் இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
தற்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரையில் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |