பிரபல நடிகருடன் படுநெருக்கமாக மீரா ஜாஸ்மின்! கணவரை பிரிந்தது உண்மையா?
தமிழ் சினிமாவில் ரன், சண்டைக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மின் நடிகர் நரேனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
மீரா ஜாஸ்மின்
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த மீரா ஜாஸ்மீன் மலையாள திரையுலகில் எண்ணற்ற படங்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது மாண்டலின் ராஜேஷ்க்கும் இவருக்கும் காதல் என்று கூறப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக கடந்த 2014ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
பின்பு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கணவரை பிரிந்துவிட்டார் என்று தகவல் வெளியாகிவரும் நிலையில், இதுகுறித்து எந்தவொரு கருத்தும் மீரா ஜாஸ்மின் தெரிவிக்கவில்லை.
ஆனால் தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.
பிரபல நடிகருடன் நெருக்கம்
சமீபத்தில் மலையாள இயக்குனர் அருண் கோபியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது நடிகர் நரேனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது நரேனை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து, மீண்டும் இணைவது உங்கள் பாதையை ஒளிரச் செய்யும். அரவணைப்பு மற்றும் மென்மையும் அனுபவிக்க வைக்கிறது. அந்த பொக்கிஷமான நிகழ்வுகள் மீண்டும் எழும்பியதற்கு நன்றி அன்பே நரேன் என்றும் பதிவிட்டுள்ளார்.






