விஜயை போல் ஒழுக்கமான மனிதரை பார்த்ததே இல்லை! முதல்வர் குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்
இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் மீனாட்சி சவுத்ரி பேட்டி ஒன்றில் முதலமைச்சர் விஜய் குறித்து வெளிப்படையாக பேசிள்ள விடயங்கள் தற்போது இணையத்தில் கவனம் வெற்று வருகின்றது.
நடிகர் விஜய் முதல்வராக பதிவியேற்றத்தில் இருந்து அரசியல் களம் நாள்தோறும் அதிரடியான மாற்றங்களுடன் பட்டையை கிளப்பி வருகின்றது.

விஜய் தவெக கட்சியை ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே ஜெயித்து முதலமைச்சராக வெற்றிவாகை சூடியுள்ளார்.
அவரை சினிமா துறையினர் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதோடு பல கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.விஜயுடன் நடித்த சக நடிகர்களும் விஜயின் வெற்றி குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மீனாட்சி சவுத்ரி பேட்டி
அந்த வகையில், இளம் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் மீனாட்சி சவுத்ரி பேட்டி ஒன்றில் முதலமைச்சர் விஜய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதில் குறிாப்பிடுகையில், விஜயை போல் ஒரு ஒழுக்கமான மனிதரை நான் பார்த்ததே இல்லை. காலை 8மணி ஷாட் என்றால், சரியாக 8 மணிக்கு ஸ்பாட்டில் இருப்பார்; பிறரின் நேரத்தை மதிப்பவர்.

நம்மோடு பணிபுரிந்த ஒருவர் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது பெருமையாக உள்ளது; ஆனால் நாங்கள் அவர் சினிமாவில் இருந்து விலகியது குறித்து மிகவும் வருத்தப்பட்டோம் என உருக்கமாக பேசியுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
நடிகை மீனாட்சி சவுத்ரி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |