இறப்பதற்கு முன்னரே மீனா பேரில் எழுதி வைக்கப்பட்ட சொத்து: மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தற்போது வரைக்கும் கொடி கட்டிப் பறக்கும் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு விபரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் மீனா.
இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர். இவர் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக மாறி ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்து விட்டார்.
சினிமாவில் பிரபலமான இவர் 2009ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.
மீனாவில் கணவர் கடந்த வருடம் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். கணவன் இறப்பிற்கு பிறகு வெளியில் வந்து சில சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.
சொத்துமதிப்பு
இந்நிலையில், தற்போது மீனாவின் சொத்துமதிப்பு பற்றிய விபரம் வெளியாகி வைரலாகி வருகின்றது. 46 வயதான நடிகை மீனாவின் பேங்க் பேலன்ஸ் மட்டும் கோடிக் கணக்கில் இருக்கிறதாம்.
அவரின் முழு சொத்து மதிப்பானது 35 கோடியிலிருந்து 40 கோடி வரை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், மீனாவின் கணவர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார் அவரின் மாத சம்பளம் மட்டும் 3 இலிருந்து 4 இலட்சம் வரை இருந்ததாம்.
இவர் உயிரிழப்பதற்கு முன்னர் தன் சொத்துக்களை எல்லாம் மீனாவின் பேரின் எழுதி வைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |