விருது விழாவில் சேலையில் ஜொலித்த மீனாட்சி சவுத்ரி! குவியும் லைக்குகள்
நடிகை மீனாட்சி சவுத்ரி விருது விழாவில் ட்ரெண்டிங் சேலையில் ஜொலித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
மீனாட்சி சவுத்ரி
தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை மீனாட்சி சவுத்ரி ,2023 ஆம் ஆண்டு விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியான 'கொலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் கால்பதித்தார்.
அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தி கோட்' திரைப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.
இந்த திரைப்படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதன் பின்னர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்திலும் மீனாட்சி சவுத்ரியின் நடிப்புக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்தது.
இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள விருது விழா புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |