நடிகை மீனாட்சி சவுத்ரியா இது? மெழுகு சிலையாகவே மாறிட்டாங்களே!
நடிகை மீனாட்சி சவுத்ரி புதிய தோற்றத்தில் மெழுகு பொம்மை போல் மாறி தற்போது வெளியிட்டுள்ள கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
மீனாட்சி சவுத்ரி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் நடிகை மீனாட்சி சவுத்ரி. தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர், பெமினா மிஸ் இந்தியா 2018 போட்டியில் அரியானா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.அதில் மிஸ் கிராண்ட் இந்தியாவாக முடிசூட்டப்பட்டார்.
2023 ஆம் ஆண்டு விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியான 'கொலை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தி கோட்' திரைப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்து தனக்கென தழிலும் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
அதனையடுத்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரியின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அது இவருக்கு சிறந்த அடையாளத்தை கொடுத்தது.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக ஊடகங்களிலும் ஆர்வம் காட்டிவரும் மீனாட்சி சவுத்ரி தற்போது ட்ரெண்டிங் ஆடையில் மெழுகு சிலை போல் காட்சியளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவி்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |