அன்னாசி பழத்தை முகத்தில் பூசினால் என்ன நடக்கும் தெரியுமா? உடனடியாக தெரிஞ்சிக்கோங்க..
பொதுவாக பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வெளியில் செல்லும் போது சரும பிரச்சனைகள் அதிகரிக்கும்.
இதனால் முகம் பொலிவற்று காணப்படும், மேலும் இதனை சரிச்செய்வதற்காக நிறைய பேர் ப்யூட்டி பாலர்களுக்கு செல்வார்கள், ஆனால் இது நிரந்தர தீர்வாக இருக்காது.
வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு நிரந்தர தீர்வை பெற முடியும் என மருத்துவர்கள் ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தவகையில் அன்னாசிப்பழத்தைக் கொண்டு உடலுள்ள அனைத்து பிரச்சினைகளை சரிசெய்யலாம் என்றால் நம்பமுடிகிறதா?
பொலிவான சருமத்துக்கு அன்னாசி பழம்
பொதுவாக நாம் வீடுகளில் வளர்க்கும் அன்னாசிகளின் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் கண் பார்வை தொடர்பாக பிரச்சினைகள் உள்ளவர்களும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
முகத்தில் பருக்கள் காணப்படும் அல்லது பருவால் ஏற்பட்ட தழும்புகள் என்பவற்றை சரிச் செய்துக் கொள்ள அன்னாசி பழத்தை டோனராக பயன்படுத்தலாம்.
இதன்படி, அன்னாசிப்பழத்தை எடுத்து அதிலுள்ள சாற்றை மட்டும் பிரித்தெடுத்து, காட்டுன் துணியால் எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வோமானால் முகத்திலுள்ள தழும்புகள் மறையும்.
கருவளையம் தொடர்பான பிரச்சினைகள்
சிலருககு அதிகம் தொலைக்காட்சி பார்த்தால் மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களால் கண்ணை சுற்றி கருவளையம் தோன்றும். இதனால் பார்பதற்கு வயதான தோற்றத்தை தருகிறது.
இது போன்ற பிரச்சினைகளுக்கு அன்னாசிப்பழச்சாறு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. ஏனெனின் அன்னாசிப்பழத்தில் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் அதிகம் இருக்கிறது. இதனால் இது கருவளைய பிரச்சினை இல்லாமல் செய்கிறது.
இதன்படி, அன்னாசி பழத்தின் சாறினை எடுத்து அதை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும்.
இவ்வாறு தினமும் படுக்கைக்குச் செல்லும் முன்னர் செய்ய வேண்டும் இதனால் கருவளைய பிர்சசினையை இல்லாமலாக்கலாம்.