சிறுநீரக கற்களை கரைக்கும் ரணகள்ளி- யாரெல்லாம் சாப்பிடலாம்?
ரணகள்ளி என்பது செடி வகையை சார்ந்த தாவரமாகும். இதன் இலைகள் நீள் வட்ட வடிவில் நீர்பற்றுடன் இருக்கும்.
இலைகளின் விளிம்புகள் வளைவுகளாக இருப்பதால் அதன் விளிம்புகளில் இருந்து தான் புதிய கன்றுகள் உருவாகும்.
அத்துடன் இந்த தாவரத்துக்கு விதை இருக்காது. ரணங்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு என்பதால் இதனை “ரணகள்ளி” என அழைக்கிறார்கள்.
இதனை விலங்குகள் சாப்பிடாது. மாறாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், ரணகள்ளியில் இருக்கும் மருத்துவ குணங்கள் தொடர்பில் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரக கற்கள்
சிறுநீரக கற்கள் தாதுக்கள் மற்றும் உப்புகள் படிகமாகி கடினமான கட்டமைப்பை உருவாகும். சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு ரணகள்ளியாக உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றது.
இதில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் மற்றும் ஃபீனாலிக்ஸ், ஃப்ளவனாய்டுகள் மற்றும் சபோனின்களின் வளமான ஆதாரம் என்பதால் இது சிறுநீரக கற்களை வெளியேற்ற செய்கிறது.
இவற்றில் இருக்கும் டையூரிடிக் மற்றும் லித்தோட்ரிப்டிக் பண்புகள் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை கரைத்து வெளியேற்றும்.
எப்படி சாப்பிடுவது?
ரணகள்ளியை தேன் மற்றும் ஷிலாஜித் சேர்த்து கஷாய வடிவில் தயார் செய்து குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |