கனவில் வெள்ளை பாம்பு கடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இனியும் அலட்சியம் வேண்டாம்!
கனவு காண்பதனை வைத்து அவர்களுக்கு அடுத்த என்ன நடக்க போவது என அறிந்து கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கனவு இரவில் தூங்கும் போது தான் வரும் என்பது குறித்து எந்த பதிவும் இல்லை. கனவுகள் நாம் எப்போது தூங்குகிறோமோ அப்போது எல்லாம் வரும். இதனால் கனவுகள் குறித்து ஆர்வம், ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மேலும் கனவுகளில் சில வகைகள் இருக்கின்றன. அதன் தன்மைக்கேற்ப பயன்களும் மாறுப்படுகின்றன.
அந்த வகையில் கனவில் பாம்பு வந்தால் என்ன நடக்கும் என்பதனை நாம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
1. நிறைய பாம்புகளை காண்பது
நாம் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கும் போது நம் பின்னால் நிறைய பாம்புகள் வந்தால் அவருக்கு சில பிரச்சனைகள் வரப் போகிறது என்று அர்த்தம்.
இவ்வாறு வரும் பாம்புகள் நீங்கள் அடித்து கொன்றாலும் அதனை துறத்தினாலும் அதற்காக நீங்கள் பயம் கொள்ள தேவையில்லை. இது போல்ன கனவு வந்தால் உங்களுக்கு வரவிருக்கும் நெருக்கடியைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.
2. இறந்த பாம்பை காண்பது
நாம் முதலில் ஒரு விடயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் அதாவது , ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, ஒருவர் கனவில் இறந்த போன பாம்பு வந்தால் இனி வரும் காலங்கள் இனி உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று பொருட்படுகின்றது.
இவ்வாறு பாம்பு வந்து அதன் பற்களை காட்டினால் உங்களுடன் நெருக்காமாக இருக்கும் ஒரு சொந்தம் உங்களுக்கு பின்னால் இருந்து துரோகம் செய்து கொண்டிருக்கின்றது என பொருட்படுகின்றது.
3. வெள்ளை அல்லது தங்க நிற பாம்பு காண்பது
வெள்ளை அல்லது தங்க நிற பாம்புகள் கனவில் வந்து ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, உங்களுக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்று அர்த்தம்.
ஒரு தடவைக்கு மேல் இந்த பாம்புகளை கனவில் கண்டு கொண்டே இருக்கும் போது உங்களுக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தம் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.
4. பாம்பு கடிப்பது போன்ற கனவு காண்பது
ஒருவரை துரத்திக் கொண்டிருக்கும் பாம்பு உங்களை தீண்டி இறந்தால் கஷ்டம் நம்மை விட்டு விலகப் போகிறது என்று அர்த்தம். மேலும் கடனால் தவித்து கொண்டிருப்பவர்கள் இந்த கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவார்கள்.
அதுவும் கனவில் வெள்ளைப் பாம்பு கடித்தால், அது மங்களகரமான விடயம் எனவும் கருதப்படுகின்றது.