ரன்பீர் கபூர் மகளுக்கு ராஹா என பெயர் வைத்தது யார்? சொந்தங்களுக்குள் எழுந்த விவாதம்
ரன்பீர்- ஆலியா தம்பதிகளின் மகளுக்கு ராஹா என பெயர் வைத்த காரணம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஆலியா- ரன்பீர்
தமிழ் சினிமாவை போல் பாலிவுட் சினிமாவில் பிரபலமான ஜோடியாக திகழ்பவர்கள் தான் ரன்பீர்-ஆலியா. இவர்கள் இருவரும் கடந்த 2018- ல் டேட்டிங் செய்ய தொடங்கினர்.
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 14, 2022 அன்று பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்து சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு, நவம்பர் 6, 2022 அன்று அவர்களுக்கு அழகான மகள் பிறந்தாள். அவருக்கு “ராஹா” என பெயர் வைக்கப்பட்டது. ராஹாவை பொது நிகழ்ச்சிகள் மற்றும் சில பொது இடங்களில் ரன்பீர்-ஆலியாவுடன் பார்க்க முடியும்.
இதனை தொடர்ந்து சமீப காலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ராஹா, பார்ப்பதற்கு அவருடைய தாத்தா ரிஷி கபூர் போல் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ராஹா என்ற பெயரின் அர்த்தம் பற்றியும் பல செய்திகள் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், ரன்பீர்-ஆலியாவின் மகள் ராஹாவின் பெயரில் ஒரு தனித்துவம் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
'ராஹா' என்ற பெயருக்கு இவ்வளவு அர்த்தமா?
இது குறித்து பேசிய ஆலியா, “ என்னுடைய மகளுக்கு ராஹா எனப் பெயர் வைத்தது என்னுடைய மாமியார்- நீது கபூர். என்டிஆரின் வீட்டில் தான் மகளின் பெயரை இறுதியாக தெரிவு செய்தோம்.
“பிரம்மாஸ்திரா பாகம் 1: சிவா” என்ற படத்தின் விளம்பரத்தின் மாமியாரும் ரன்பீர் கபூரும் ஹைதராபாத்தில் இருந்தார்கள்.
அந்த சமயத்தில் எங்கள் இருவரையும் ஜூனியர் என்டிஆர் இரவு உணவிற்கு அழைத்தார். வீட்டிற்கு சென்ற பின்னர் மாமியார் எங்களுடன் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் என்ன பெயர், பெண் குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று விவாதம் தொடங்கியது.
இந்த விவாதத்தின் இறுதி முடிவில் தான் 'ராஹா' என்ற பெயர் வந்தது. இந்த பெயருக்கும் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன.
சமஸ்கிருதத்தில் வம்சம், வங்காள மொழியில் ஓய்வு & மகிழ்ச்சி, அரபு மொழியில் அமைதி, செழிப்பு மற்றும் சுதந்திரம் ஆகிய பொருட்களை தருகின்றது.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக இருக்கின்றது. அத்துடன் ஒரு பெயருக்கு இவ்வளவு அர்த்தமா? என நெட்டிசன்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |