கமல்ஹாசன்- மாயாவை கிண்டலடித்த பிரபலங்கள்: வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனையும், போட்டியாளரான மாயாவையும் பிரபல நகைச்சுவை கலைஞர்கள் கிண்டலடிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7ன் இறுதி நாள் இன்றாகும், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே இதன் போட்டியாளரான மாயாவுக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்து வருவதாக சர்ச்சை இருந்து வருகிறது.
மற்ற போட்டியாளர்களுடன் அதிக வன்மத்தை காட்டினாலும் மாயாவை மட்டும் கமல்ஹாசன் கேள்வி கேட்பது இல்லை.
இதையே மற்றவர்கள் செய்தால் பெரிதாக காட்டப்படுகிறது என்றெல்லாம் கமெண்டுகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சி நிர்வாகமும், கமல்ஹாசனும் மாயாவுக்கு ஆதரவாக இருப்பதையே இது காட்டுகிறது எனவும் பேசப்படுகிறது.
இந்நிலையில் நகைச்சுவை கலைஞர்களான புகழ் மற்றும் குரேஷி, கிண்டலடித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இதில் குரேஷி கமல் போல் மிமிக்ரி செய்திருக்கிறார். அவரிடம், புகழ் ஒவ்வொரு கேள்வியாக கேட்கிறார்.
‘உங்களுக்கு சென்னையில் பிடித்த இடம் என்ன?’ என்று அவர் கேட்க ’மாயாஜால்’ என கூறுகிறார். பிடித்த படம் ’மாயாபஜார்’, தமிழ்நாட்டில் பிடித்த இடம் ’மாயவரம்’ என கூறுகிறார்.
இப்படி கமல்ஹாசன், பிக்பாஸ் மாயாவை கிண்லடித்துள்ளனர்.
Ellam maya ????
— ??????? (@vampire_offc) January 12, 2024
Polanthufiy on stage #Maya kamal ?
Even if you say you are not in favor of just one #KamalHassan ?
many people know #KaMa #ToxicMaya ??? #BiggBossTamil #BiggBossTamil7#BiggBoss7Tamil #BiggBossTamilSeason7 pic.twitter.com/MaMSVxBvnu
இந்த வீடியோ வைரலான நிலையில், புகழ் மற்றும் குரேஷி இருவரும் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், அந்த வீடியோ துபாயில் 2 மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும், தங்களுக்கு கொடுத்ததையே அப்படியே பேசியதாகவும், இனிமேல் இப்படி நடக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கமல் சாருக்கு முன்னால் நாங்கள் ஒன்றுமே இல்லை என்றும், மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
Who gave script?! What the hell? Whoever it is! You came here telling joke. Oof.
— vigneshwari (@vikkiioffical) January 13, 2024
But these things is very normalized on sm as well
.
. #BiggBossTamil7 #BiggBossTamilSeason7#Biggboss7Tamil#CookwithComali #Cwc #kureshi#Pugazh
pic.twitter.com/0fTcNxRmas