இலங்கையில் நடக்கும் அதிசயம்: நீர்த்தேக்கத்தில் மூழ்கியிருக்கும் மூன்று மத ஆலயங்கள்
பொதுவாகவே நம்மில் பலர் ஆன்மீக விடயத்தில் அதீத ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.
அப்படியானவர்கள் தினம் தினம் ஒவ்வொரு கோவில்கள் அல்லது புனித தலங்கள் பற்றிய ஆராய்ச்சி ஒன்றை நடத்தி அதன் அருமை பெருமைகளை அறிந்துக் கொண்டு ஒரு ஆன்மீக பயணத்தை ஆரம்பிப்பார்கள்.
அப்படி பலரும் பார்த்திடாத, கேள்விபட்டிராத அதிசய ஆலயம் ஒன்று இலங்கையில் இருப்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எத்தனையோ வித்தியாசமான இடங்களைப் பார்த்து வாய்பிளந்தவர்கள் சில காலம் நீருக்கடியிலும் சிலகாலம் தரையிலும் காட்சியளிக்கும் தலங்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.
அதுவும் சைவ கோயில் மட்டுமல்ல 4 மதக் கோயில்களும் இருக்கிறது. அப்படியான அதிசய கோயில் ஒன்றைப் பற்றிய பதிவுதான் இது.
நீருக்குள் மூழ்கும் கோயில்
இலங்கையில் மஸ்கெலிய பழைய நகரத்தில் மவுசாக்கலை நீர்தேக்கத்தில் அமையப் பெற்ற கோயில் தான் இந்த கதிரேசன் கோயில்.
இந்த நீர்த்தேக்கத்தில் கோயில் மட்டுமல்ல பௌத்த விகாரை, தேவாலயம், முஸ்லிம் பள்ளி என்று 4 மதக் தலங்களும் அமைந்திருக்கிறது கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் இது உண்மை தான்.
1964 ஆம் ஆண்டு, கடல் மட்டத்திலிருந்து 2,200 அடி உயரத்தில் மஸ்கெலியா ஓயாவை அணைக்கட்டி மவுஸ்கெல்லவில் நீர்த்தேக்கத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
அப்படி அமையப்பெற்ற மஸ்கெலி ஓயா, சாமிமலை மற்றும் சிதாகங்குல ஓயா மலைகளில் இருந்து உருவாகும் களனி கங்கையின் முக்கிய கிளை நதிகளாகும்.
இது மவுஸ்கெல்லை நீர்த்தேக்கத்தை வளர்க்கும் ஸ்ரீ பாதத்தின் உச்ச வன சரணாலயத்திலிருந்து உருவாகிறது. இந்த நீர்த்தேக்கத்தின் அரிய காட்சி மற்றும் வானிலை கூட கடவுள்களின் விருப்பப்படி மட்டுமே பார்க்க முடியும்.
மேலும், இந்த ஆலயம் பற்றிய பல ஆச்சரிய தகவல்களை கொண்டு வருகிறது நமது பயணம் காணொளி,
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |