செவ்வாயின் நட்சத்திர மாற்றம்... 4 ராசிகளுக்கு கிடைக்கும் ஜாக்பாட்
செவ்வாய் கிரகத்தின் மாற்றத்தினால் அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செவ்வாயின் மாற்றம்
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றத்தினை முக்கியமாக பார்க்கப்படுகின்றது. குறிப்பிட்ட காலத்தில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தினை கிரகங்கள் மாற்றுகின்றது.
இவ்வாறான தருணத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளும் காணப்படும். நவகிரகங்களில் செவ்வாய் ஆற்றல், துணிச்சல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகமானது உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். சனிபகவானால் ஆளப்படும் உத்திரட்டாதி நட்சத்தில் ஏப்ரல் 24ம் தேதி வரை நிலைத்திருப்பாராம்.
இந்த காலக்கட்டத்தில் முன்னேற்றத்தினையும், அதிர்ஷ்டத்தினையும் எந்தெந்த ராசியினர் பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த கிரக மாற்றமானது சாதகமாக இருப்பதுடன், கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். சேமிப்பு அதிகரிப்பதுடன், சமூகத்தில் மரியாதையும், நற்பெயரும் அதிகரிக்குமாம்.
குடும்பத்துடன் நேரத்தினை செலவிடவும், பணியிடத்தில் பாராட்டுகளும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், முதலீட்டில் பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.
நீண்ட கால ஆசை அனைத்தும் நிறைவேறுவதுடன், வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி நிறைந்து காணப்படும்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த கிரக மாற்றத்தினால் வருமானம் அதிகரிப்பதுடன், புதிய வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும். குடும்பத்தினரின் நீண்ட கால ஆசை நிறைவேறும்.
திடீர் பண ஆதாயம், வேலையில் பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதுடன், இலக்குகளை அடைவதில் வெற்றியும் பெறுவீர்கள்.
மனவலிமை மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிப்பதுடன், செல்வத்தையும் வெற்றிகரமாக சேமிக்கவும் செய்வீர்கள். மேல் அதிகாரிகளிடம் பாராட்டும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த காலக்கட்டத்தில் பெரிய வெற்றியும், நிதி ஆதாயமும் கிடைக்கும். வணிக ஒப்பந்தம் லாபத்தை கொடுப்பதுடன், புதிய முதலீடுகளும் வருவாயை அளிக்கும்.
அதிர்ஷ்டம், உயர் கல்வி கனவுகள் அனைத்தும் நிறைவேறுவதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவிற்கு வருவதுடன், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்குமாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த கிரகத்தினால் நேர்மறை மாற்றங்கள் உருவாவதுடன், வருமான நிலைகள் உயரவும் செய்கின்றது.
புதிய வருமான ஆதாரங்களை பெறுவதுடன், தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை பெறலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி கிடைப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவுகின்றது.
பழைய முதலீடுகள் லாபத்தை அளிப்பதுடன், புதிய லாபத்திற்கு ஒப்பந்தங்களையும் எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்படுமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |